| |
கம்பன் சொற்செயலி யின் - சீரிய பயன்கள்:
1.
நம்பகமானது மற்றும் துரிதமாய் இயங்கவல்லது.
2. தமிழ், ஆங்கிலம் தட்டச்சு.
3. தமிழ், ஆங்கிலம் - பட்டிவழி, தகவல் மற்றும் உரையாடல் பெட்டி, உதவி
துணுக்குகள், விவரப்பட்டை(status bar).
4. தமிழ், ஆங்கிலம் - தானியங்கி சொல்பிழை திருத்துதல். தட்டச்சு எந்த மொழியில்
நடக்கின்றது என தானாகவே கண்டுகொண்டு அந்த அகராதியினை ஏற்று பிழைதிருத்தும் வசதி
இம்மென்பொருளில் உள்ளது.
5. அட்டவணை இடஅமைவு(layout), ஆயத்தப்பட உருவங்கள்(clipart ) புகுத்துதல்.
6. செய்தித்தாள் முறையில் பன்வரிசையில் இடஅமைவு செய்தல்.
7. அடிக்குறிப்பு இயற்ற, திருத்த தனி அட்டை.
8. பல வகை வண்ணம், எழுத்துரு, பத்தி - ஆகியன வடிவமைத்தல்.
9. தேடு, மாற்று, செல் - போன்ற வசதிகள்.
10. புத்தகக்குறி புதிய ஆர்.டி.எஃப் படிவத்துடன் இசைவுடையது.
11. விண்டோஸ் 2000 பயனாளர் இடைமுகம் (user interface) வகை.
12. ஆயத்தப்பட தொகுப்பு 200 உருவப்படங்களுடன்.
13. திரையிலேயே கண்டு, தலைப்பு மற்றும் அடிக்குறிப்புகளை திருத்தும் வசதி.
14. முதல் பக்கத்தில் தனியான, தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு அட்டைகள்.
15. தானியங்கி பொருளடக்க அட்டவனை. நீங்கள் ஆவணத்தை இயற்றும் போது, பக்க எண்களை
இது தானாகவே நிர்ணயிக்கவல்லது.
16. பொருளடக்கத்தை புள்ளி(bullets) மற்றும் எண்(numbering) அடிப்படையில்
குறியிடும் வசதி.
17. அளவுகோள்(ruler), விவரப்பட்டை(status bar), விசைப்பட்டை(tool bar),
வடிவப்பட்டை(format bar) ஆகியன.
18. பத்திகள்(paragraphs), தத்தல்(tabs), உள்தள்ளல்(indenting).
19. டி.எஸ்.ஸி.ஐ.ஐ குறியீடாக்கி, இருமொழி குறியீடாக்கி, புதிய ஆர்.டி.எஃப்
படிவம் எச்.டி.எம்.எல் அமைவு - போன்ற பலவகையான கோப்பு வடிவங்களையும்
ஏற்கவல்லது.
20. தானியங்கி தொங்கும் பட்டியல்(drop caps).
21. பற்பல பகுதிகளாக இடஅமைவு(multiple section layout).
22.
25 வகை எழுத்துருக்கள்.
23. நேர்த்தியான முறையில் எழுத்துருவை மாற்றும் வசதி. தமிழ் வார்த்தைகளை ஆங்கில
எழுத்துருவிலும், ஆங்கில வார்த்தைகளை தமிழ் எழுத்துருவிலும் பிழையின்றி
மாற்றலாம்.
24. மூன்று வகையான விசைப்பலகை - தமிழக அரசின், கம்பனின் மற்றும் தட்டச்சு
வகையில்.
மற்றும் பல. .. |
|