|
தகவல்கள் |
||||
![]() |
கம்பன்சொற்செயலி 4.0 வெளியீட்டு தேதியை இப்பகுதியில் விரைவில் காண்பீர்கள்.
உரிமை கம்பன் மென்னியம் ஆஸ்திரேலியா (உ)1994-2004 |
|||
|
||||
|
செப்டம்பர்
2003: கம்பன்சொற்செயலி பதிப்பு 3.02 அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று, அங்கு கற்றுத் தரப்படுகிறது. பயன்படுத்தவும் ஏற்கப்பட்டது. இதுவே ஒரு முக்கிய சாதனை, ஏனென்றால், கம்பனன்றி வெளிநாட்டில் உருவான வேறு எந்த மென்பொருளும் இந்தியாவில் இந்நிலையை பெற்றதில்லை. |
||||
|
பிப்ரவரி
2003: கம்பன்சொற்செயலி 4.0 உருவாக்க தொடக்கம். தொடக்கநிலை மற்றும் பயன்பாட்டு வடிவம் வரையறை செய்யப்பட்டது. |
||||
|
மே 2001: கம்பன் மென்னியம்-இன் சென்னை கிளை தொடக்கம். சென்னையைச் சேர்ந்த மணிவாசகர் நூலகத்துடன் சேவை மற்றும் வணிக ஒப்பந்தம் கையெழுத்தானது. |
||||
|
ஏப்ரல்
2000: கம்பன்சொற்செயலி பதிப்பு 3.02 தமிழக அரசால் அங்கீகாரம் பெற்று, அதன் பெரும்பான்மயான துறைகளிலும், அலுவலகங்களிலும் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழ் எழத்துரு மற்றும் விசைப்பலகை வடிவமும் தமிழக அரசால் ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. |
||||
|
டிஸம்பர்
1999: |
||||
|
நவம்பர்
1999: |
||||
|
ஜுலை 1999: எழத்துரு மற்றும் விசைப்பலகை வடிவமைப்பு செந்தரம் தமிழக அரசால் வெளியீடு. இச்செந்தரம் வகுக்கும் குழுவின் அங்கத்தினராக கம்பன் மென்னியம்-இன் திரு. வாசுதேவன் அவர்கள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழ் சீரமைப்பு கம்பன் இணையத்தில் இலவசமாக வழங்கப்பட்டது. இன்றும் இப்பொதி பரவலாக உபயோகத்தில் உள்ளது. |
||||
|
செப்டம்பர்
1998: TSCII எழத்துரு வடிவமைப்பின் செந்தரமாக அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் முதலாவதாக உருவாக்கப்பட்ட தமிழ் மின்அஞ்சல் கம்பன்இணையத்தில் இலவசமாக வழங்கப்பட்டது. இம்மென்பொருள், தமிழ் சொற்களுடன், திரையில் விசைப்பலகை காணக்கூடிய வகையில் அமைக்கப்பெற்று இன்றும் இது ஒரு நுண்ணிய முறையாகக் கருதப்படுகிறது. |
||||
|
டிஸம்பர்
1996: கம்பன் மென்னியம்-இன் இணையதளம் kamban.com.au எனும் முகவரியில் வெற்றிகரமாக ஏற்றப்பட்டது. தமிழ் சார்ந்த தளவரிசையில் இதுவே முதன்மையானது ஆகும் என்பதே இதன் சிறப்பு. |
||||
|
ஜுன் 1996: கம்பன் மென்னியம்-இன் தமிழ் சொற்செயலி பதிப்பு 2.0, KPro என்ற பெயரில் வெளியீடு. KPro - ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் எழத்துரு மற்றும் படிமத்துடன் வெளிவரும் முதல் மென்பொருளாகும். இதிலும் திரையில் விசைப்பலகை காணக்கூடிய வகையில் அமைக்கப்பெற்று இருந்தது. கோப்புகளை RTF வடிவில் காப்பு முறையும் இருந்தது. KProவே இன்றளவும் எழத்துரு மற்றும் விசைப்பலகை வடிவமைப்பில் முன்னோடியாகத் திகழ்கிறது என்பது மிகையாகாது. KProவிலே தான் உதவிகோப்பு மற்றும் தமிழ் பெயரில் GUI வார்த்தைகள் புகுத்தப்பட்டன. தமிழக அரசும் இவற்றின் பல பெயர்களை செந்தரமாக ஏற்றது. |
||||
|
ஜுலை 1995: கம்பன் மென்னியம்-இன் சிங்கப்பூரின் கிளை தொடக்கம். சிங்கப்பூர் இன்று பிரதான வியாபார ஸ்தலமாகவும் உருவெடுத்து இங்கிருந்தே உலகின் மற்ற இடங்களுக்கு மென்பொருள் பொதிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. |
||||
|
மே 1994: கம்பன் மென்னியம்-இன் தமிழ் சொற்செயலி முதற்பதிப்பு வெளியீடு. இதுவே ஏனைய மென்பொருள் வெளியீடுகளுக்கு அச்சாரமாகவும், ஆதாரமாகவும் கருதப்படுகிறது. |
||||