பாரதிதாசன் - ஒரு சிறிய முன்னுரை: மகாகவி பாரதியாரின் விருப்பப்படி நம் புரட்சிக் கவிஞர் அவர்கள் முதன்முதலில் பாடிய பாட்டு இதன் கீழ்க் காணப்படுவது. இநதப் பாடல் பல பத்திரிகைகளில் - பல மொழிகளில் வெளி வந்துள்ளது! இந்தப் பாட்டின் மூலம்தான் நம் கவிஞர் தமிழ் நாட்டிற்கு அறிமுகமானார். எங்கெங்குங் காணினும் சக்தியடா! - தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா! - அங்குத் தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத் தாயின் கைப்பந்தென ஓடுமடா! - ஒரு கஙகுலில் ஏழு முகிலினமும் - வந்து கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? - எனில் மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள் மந்த நகையங்கு மின்னுதடா! காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை காண நினைத்த முழுநினைப்பில் - அன்னை தோளசைத்தங்கு நடம்புரிவாள் - அவன் தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு வாளைச் சுழற்றும் விசைரினிலே - இந்த வைரமுழுதும் துண்டு செய்வேன் - என நீள இடையினின்றி நீ நினைத்தால் - அம்மை நேர்படுவாள் உன்றன் தோளினிலே! இயற்கை உதய சூரியன் உலகமிசை உணர்வெழுப்பிக் கீழ்த்திசையின் மீதில் உதித்துவிட்டான் செஙகதிரோன்; தகத்தகாயம் பார்! விலகிற்றுக் காரிருள்தான்; பறந்தது பார் அயர்வு; விண்ணிலெல்லாம் பொன்னொளியை எற்றுகின்றான் அடடா மிலையும் எழிற் பெருங்கடலின் அமுதப்ரவாகம்! மேலெல்லாம் விழி அள்ளும் ஒளியின் ப்ரவாகம்! நலம் செய்தான்; ஒளிமுகத்தைக் காட்டிவிட்டான், காட்டி நடத்துகின்றானை தூக்கமதில் ஆழ்ந்திருந்த உலகை! ஒளிசெய்தான் கதிர்கோமான் வானகத்தில் மண்ணில்! உயர்மலைகள், சோலை நதி இயற்கை எழில்கள் பார்! களிசெய்தான் பெருமக்கள் உள்ளத்தில்! அதனால் கழிதைகள், கைத்தொழில்கள் என்னென்ன ஆக்கம் தெளிவளிக்க இருட்கதவை உடைத்தெறிந்தான் பரிதி! திசைமகளை அறிவுலகில் தழுவுகின்றார் மக்கள்; ஒளியுலகின் ஆதிக்கம் காட்டுகின்றான்; வானில் உயர்கின்றான், உதயசூரியன் வாழ்க நனறே! காடு (காவடிச் சிந்து) முட்புதர்கள் மொய்த்ததரை எங்கும்! - எதிர் முட்டுகருங் கற்களும் நெருங்கும் - மக்கள் இட்டடி எடுத்தெடுத்து வைக்கையிலே கால்கழில் தடுஙகும் - உள் நடுங்கும். கிட்டிமர வேர்கள் பல கூடும் - அதன் கீழிருந்து பாம்புவிரைந தோடும் - மர மட்டையசை வால்புலியின் குட்டிகள் போய்த் தாய்ப்புலியைத் தேடும் - பின் வாடும். நீள்களைகள் ஆல்விழுதி னோடு - கொடி நெய்துவைத்த நற்சிலந்திக் கூடு - கூர் வாளெயிற்று வேங்கையெலாம் வால் கழற்றிப் பாயவருங் காடு - பள்ளம் மேடு! கேளோடும் கிளம்பிவரும் பன்றி - நிலம் கீண்டுகிழங் கெடுத்த தன்றி - மிகு தூளிபடத் தாவுகையில் ஊளையிடும் குள்ளநரி குன்றில் - புகும் ஒன்றி. வெனிடோர் வானடர்ந்த வாறு - பெரு வண்கிளை மரங்கள் என்ன வீறு! நல்ல தேனடை சொரிந்ததுவும் தென்றைமரம் ஊற்றியதும் ஆறு - இன்பச் சாறு! கானிடைப் பெருமபறவை நோக்கும் - அது கெலிடையே காலிகளைத் தூக்கும் - மற்றும் ஆனினம் சுமந்தமடி ஆறெனவே பால்சுரந்து தீர்க்கும் - அடை ஆக்கும். தமிழ் 1. தமிழின் இனிமை கனியிடை ஏறிய கணையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும்; நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரிள நீரும், இனியன என்பேன் எனினும், - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்! பொழிலிடை வணிடின் ஒலியும், - ஓடைப் புனலிடை வாய்க்கும் கலியும், குழலிடை வாய்க்கும் இசையும், - வீணை கொட்டிடும் அமுதப் பண்ணும், குழவிகள் மழலைப் பேச்சும், - பெண்கள் கொங்சிடும் இதழின் வாய்ப்பும், விழைகுவ னேனும், தமிழும் - நானும் மெய்யாய் உடலுயிர் கண்டிர்! பயிலுறும் அண்ணன் தம்பி, - அக்கம் பக்கத் துறவின் முறையார், தயைமிக உடையாள் அன்னை, - என்னைச் சந்ததம் மறவாத் தந்தை, குயில்போற் பேசிடும் மடையாள், - அன்பைக் கொட்டி வளர்க்கும் பிள்ளை, அயலவராகும் வண்ணம் - தமிழ் என் அறிவினில் உறைதல் கண்டீர்! நீலச் சுடர்மணி வானம், - ஆங்கே நிறையக் குளிர்வெண் ணிலவாம், காலைப் பரிதியின் உதயம், - ஆங்கே கடல்மேல் எல்லாம் ஒளியாம், மாலைச்சுடரினில் மூழ்கும், - நல்ல மலைகளின் இன்பக் காட்சி, மேலென எழுதும் கவிஞர், - தமிழின் விந்தையை எழுதத் தரமோ? செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய் தேக்கிய கறியின் வகையும், தன்னிகர் தானியம் முதிரை, - கட்டித் தயிரோடு மிளகின் சாறும், நன்மதுரஞ்செய் கிழங்கு - கானில் நாவிலினித்திடும் அப்பம், உன்னை வளர்ப்பன தமிழா! - உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே! 2. இன்பத் தமிழ் தமழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எஙகள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்றுபேர் - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! 3. தமிழ் உணவு ஆற்றங் கரைதனிலே - இருள் அந்தியிலே குளிர் தந்த நிலாவினில், காற்றிலுட் கார்ந்திருத்தேன் - வெய்யிற் காலத்தின் தீமை இலாததினால் அங்கு வீற்றிருந்தார் பலபேர் - வந்து மேல்விழும் தொல்லை மறந்திருந்தார்! பழச் சாற்றுச் சுவைமொழியார் - சிலர் தங்கள் மணாளரின் அண்டையிருந்தனர்; ஆற்றங்கரைதனிலே! நாட்டின் நிலைபேசிப் - பல நண்பர்கள் கூடி இருந்தனர் ஓர் புறம் ஓட்டம் பயின்றிடுவோர் - நல்ல ஒன்பது பத்துப் பிராயம் ஆடைந்தவர் கோட்டைப் தவுன் உருக்கிச் - செய்த குத்துவிளக்கினைப் போன்ற குழந்தைகள் ஆட்டநடை நடந்தே - மண்ணை அள்ளுவர், வீழுவர், அம்புலிவேண்டுர்; ஆற்றங்கரைதனிலே! புனலும் நிலாவொளியும் - அங்குப் புதுமை செய்தே நெளிந்தோடும்! மரங்களில் இனிது பறந்து பறந்-தங்கும் இங்கும் அடங்கிடும் பாடிய பறவைகள்! தனி ஒரு வெள்ளிக்கலம் - சிந்தும் தரளங்கள் போல்வன நிலவு நட்சத்திரம்! புனைரிருள் அந்திப் பெண்ணாள் - ஒளி போர்த்ததுண்டோ எழில் பூத்ததுண்டோ அந்த ஆற்றங்கரைதனிலே! விந்தை உரைத்திடுவேன் - அந்த வேளையில் அங்கொரு வாள்விழி கொண்டவள் முந்த ஓர் பாட்டுரைத்தாள் - அது முற்றுந் தெலுங்கில் முடிந்து தொலைந்தது! பிந்தி வடக்கினிலே - மக்கள் பேசிடும் பேச்சினில் பாட்டு நடத்தினள் எந்தவிதம் சகிப்பேன்? - கண்ட இன்பம் அனைத்திலும் துன்பஙகள் சேர்ந்தன; ஆற்றங்கரைதனிலே! பொருளற்ற பாட்டுக்களை - அங்குப் புத்தமுதென்றனர்; கைத்தாளமிட்டனர்; இருளுக்குள் சித்திரத்தின் - திறன் ஏற்படுமோ இன்பம் வாய்த்திடக்கூடுமோ? உருவற்றுப் போனதுண்டோ - மக்க உயர்வுற்ற தமிழ்மக்கள் உணர்வுற்ற நல்வாழ்வு? கருவற்ற செந்தமிழ்ச்சொல் - ஒரு கதியற்றுப் போனதுண்டோ அடடா அந்த ஆற்றங்கரைதனிலே! சங்கீத விற்பனனாம் - ஒரு சண்டாளன் ஆரம்பத்தான் இந்துஸ்தான் ஒன்றை; அங்கந்தப் பாட்டினிலே - சுழை அத்தனையும் கண்டுவிட்டது போலவே நம்குள்ளர் வாய்திறந்தே - நன்று நன்னென ஆர்ப்பரித்தார்; அந்த நேரத்தில் எங்கிருந்தோ தமிழில் - ஓர் இன்தநறுங்கவி கேட்டது காதினில் ஆற்றங்கரைதனிலே! 'அஞ்சலை, உன் ஆசை - என்றை அப்புறம் இப்புறம் போகவிடாதடி கொஞ்சம் இறங்கிடுவாய் - நல்ல கோவைப் பழத்தினைப் போன்ற உதட்டினை வஞ்சி, எனக்களிப்பாய்' - என்ற வண்டத் தமிழ்ப்பதம் பண்டிற் கலந்தென்றன் நெஞ்சையும் வானத்தையும் - குளிர் நீரையும், நிலவையும் தமிழர் குலத்தையும் ஆற்றங்கரைதனிலே! ஒன்றெனச் செய்ததேவ - நல் உவகை பெறச்செய்ததே தமிழ்ப் போசனம்! நன்று தமிழ் வளர்க - தமிழ் நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக! என்றும் தமிழ் வளர்க - கலை யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக! இன்பம் எனப்படுதல் - தமிழ் இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக ஆற்றங்கரைதனிலே! 4. தமிழ்ப் பேறு ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட 'என்னை எழு'தென்று சொன்னது வான்! ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின் ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்! காடும் கழனியும் கார்முகிலும் வந்து கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும் ஆடும்மரில் நிகர் பெண்களெல்லாம் உயிர் அன்பினைச் சித்திரம் செய்க, என்றார்! (1) சோலைக் குளர்தரு தென்றல் வரும்,பசுந் தோகை மயில் வரும், அன்னம் வரும், மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும் மாணிக்கப் பரிதி காட்சிதரும் 'வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர் வெற்பென்று சொல்லி வரைக' எனும் கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து கூவின என்னை - இவற்றிடையே, (2) இன்னலிலே, தமிழ் நாட்டினிலேயுள்ள என் தமிழ் மக்கள் துயின்றிருந்தார். அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென் ஆவியில் வந்துகலந்ததுவே! 'இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நலை எய்திவிட்டால் - துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்' (3) 5. எங்கள் தமிழ் இனிமைத் தமிழ் மொழி எமது-எமக் கின்பந் தரும்படி வாய்த்த நல் அமுது கனியைப் பிழிந்திட்ட சாறு-எங்கள் கதிரில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை-எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை நுனியுண்டு நனியுண்டு காதல்-தமிழ் நாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில் (இனிமைத்) தமிழ் எங்கள் உயிர் என்ப தாலே-வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே தமிழ் என்னில் எம்முயிர்ப் பொருளாம்-இன்பத் தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம் தமிழுண்டு தமிழ் மக்க ளுண்டு-இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் தல்ல தொண்டு தமிழ் என்று தோள் தட்டி ஆடு!-நல்ல தமிள் வெல்க வெல்க என்றே தினம் பாடு (இனிமைத்) 6. தமிழ் வளர்ச்சி எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும். இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும். வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாங் கண்டு தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து, செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் தெய்வதுவும் வேண்டும் எளிமையினால் ஒரு தமிழனி படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும். (1) உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்! தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும் இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும் எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந் தோமில்லை தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்! (2 7. தமிழ்க் காதல் கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க் காட்டினில் வண்டின் இசைவளத்தால் கமழ்தரு தென்றல் சிலிர் சிலிர்ப்பால் - கருங் கண்மலரால் முல்லை வெண்ணகைப்பால் அமையும் அன்றங்களின் மென்னடையால் - மயில் ஆட்டத்தினால் தளிர் ஊட்டத்தினால் சமையும் ஒருத்தி - அப் பூஞ்சோலை எனைத் தன் வசம் ஆக்கிவிட்டாள் ஒருநாள். (1) சோலை அணங்கொடு திண்ணையிலே - நான் தோளின் ஊன்றி இருக்கையிலே சேலை நிகர்த்த விழியுடையாள் - என்றன் செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்! சோலை யெலாம் ஒளி வானமெலாம் - நல்ல தோகையர் கூட்ட மெலாம் அளிக்கும் .கோல இன்பத்தை யென் உள்ளத்திலே - வந்து கொட்டி விட்டாள் எனைத் தொட்டிழுத்தாள்! (2) 8. எந்நாளோ? என்னருந் தமிழ்நாட்டின் கண் எல்லோரும் கல்விகற்றுப் பன்னறுங் கலைஞானத்தால், பராக்கிரமத்தால், அன்பால், உன்னத இமமலைபோல் ஓங்கிடும் கீர்த்தி யெய்தி இன்புற்றார் என்று மற்றோர் இயம்பக் கேட்டிடல் எந்நாளோ? (1) கைத்திறச் சித்திரங்கள், கணிதங்கள் வான நூற்கள், மெய்த்திற நூற்கள், சிற்பம் விஞ்ஞானம், காவியங்கள் வைத்துள தமிழர் நுற்கள் வையத்தின் புதுமை என்னப் புத்தகசாலை எங்கும் புதுக்கு நாள் எந்தநாளோ? (2) தாயெழிற் றமிழை, என்றன் தமிழரின் கவிதைர தன்னை ஆயிரம் மொழியிற் காண இப்புவி அவாவிற் றென்ற தோயுறும் மதுவின் ஆறு தொடர்ந்தென்றன் செவியில் வந்து பாயுஙாள் எந்தநாளோ, ஆரிதரைப் பகர்வார் இங்கே? (3) பார்த்தொழில் அலைத்தும் கொண்ட பயன் தரும் ஆலைக்கூட்டம் ஆர்த்திடக் கேட்பதென்றோ? அணிபெறத் தமிழர்கூட்டம் போர்த்தொழில் பயில்வதெண்ணப் புவியெலாம் நடுங்கிற்றென்ற வார்த்தையைக் கேட்டு நெஞ்சு மகிழ்ந்து கூத்தாடல் என்றோ? (4) வெள்ளம்தபோல் தமிழர் கூட்டம் வீரங்கொள்கூட்டம்; அன்னார் உள்ளத்தால் ஒருகரே மற் றுடலினால் பலயாய்க் காண்பார் கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக்கண்டு துள்ளும்நாள் எந்நாள்? உள்ளம் சொக்குமகூ நாள் எந்தநாளோ? (5) தறுக்கினாற் பிறதேசத்தார் தமிழன்பால்-என்-நாட்டான்பால் வெறுப்புறும் குற்றஞ்செய்தா யாசலால் விர்ந்தன்னாரை நொறுக்கினார் முதுகெலும்தைத் தமிழர்கள் என்றசேதி குறித்தசொல்கேட் டின்பத்திற் குதிக்கும் நாள் எந்நாளோ? (6) நாட்டும்சீர்த் தமிழன் இந்த நானில மாயம்கண்டு காட்டிய வழியிற் சென்று கதிபெற வேண்டும் என்றே ஆட்டும்சுட்டுவிரல் கண்டே ஆடிற்று வையம் என்று கேட்டுநான் இன்ப ஊற்றுக் கேணியிற் குளிப்பதெந்நாள்? (7) விண்ணிடை இரதம் ஊர்ந்து மேதினி கலக்குதற்கும் பண்ணிடைத் தமிழைச் சேர்த்துப் பாரினை மயக்குதற்கும் மண்ணிடை வாளையேந்திப் பகைப்புலம் மாய்ப்பதற்கும் எண்ணிலாத் தமிழர் உள்ளார் எனும்நிலை காண்பதென்றோ? (8) கண்களும் ஒளியும்போலக் கவின் மலர் வாசம்போலப் பெண்களும் ஆண்கள் தாமும் பெருந்தமிழ் நாடுதன்னில், தண்கடல் நிகர்த்த அன்பால் சமாமத்தர் ஆனாட் என்ற பண்வந்து காதிற்பாயப் பருகுநாள் எந்தநாளோ? (9) 9. சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல கண்டே! (எங்) திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோம் மங்கு கடல் இவற்றோடும் பிறந்ததமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின்கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே (எங்) சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூ தூது சங்கே பொங்கும் தமிழர்க் கின்னல் விளைரத்தால் சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு (எங்) வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள் ஙகையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம் வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம் (எங்) 10. தமிழ்க் கனவு தமிழ் நாடெங்கும் தடபுடல்! அமளி!! பணமே எங்கணும் பறக்குது விரைவில் குவியுது பணங்கள்! மலைபோற் குவியுது!! தமிழின் தொண்டர் தடுக்கினும் நில்லார். ஓடினார், ஓடினார், ஓடினார் நடந்தே! ஆயிரம் ஆயிரத் தைந்நூறு பெண்கள் ஒளிசொள் விழியில் உறுதி சாட்டி இறக்கை கட்டிப் பறக்கின்றார்கள்! ஐயோ, எத்தனை அதிர்ச்சி, உத்ஸாகம்! சமுத்திரம் போல அமைந்த மைதானம்! அங்கே கூடினார் அத்தனை பேரும்! குவித்தனர் அங்கொரு கோடி ரூபாய்! வீரத் தமிழன் வெறிகொண் டெழுந்தான்! உரக்கக்கேட்டான்: உயிரோ நம் தமிழ்?, அகிலம் கிழிய'ஆம்! ஆம்!' என்றனர்!! ஒற்றுமை என்றான்; 'நற்றேன்' என்றனர். உள்ளன்பு ஊற்றி ஊற்றி ஊற்றித் தமிழை வளர்க்கும் சங்கம் ஒன்று சிங்கப் புலவரைச் சேர்ந்தமைத்தார்கள்! உணர்ச்சியை, எழுச்சியே, உக்கத்தையெலாமகூ கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள் சுடர்க்கவி தொடங்கினர்! பறந்தது தொழும்பு! கற்கண்டு மொழியில் கற்கணிடுக் கவிதைகள், வாழ்க்கையை வானில் உயர்த்தும் நூற்கள், தொழில் நூல், அழகாய்த் தொகுத்தனர் விரரைவில்! காற்றிலெலாம் கலந்தது கீதம்! சங்கீத மெலாம் தமிழ் கனிந்த சாறு! கண்ணெதிர்தமிழ்க் கட்டுடல் வீரர்கள்! காதல் ததும்பும் கண்ணா ளன்றனைக் கோதை ஒருத்தி கொச்சைத் தமிழால் புகழ்ந்தாழென்று, பொறாமல் சோர்ந்து வீழ்ந்தான்! உடனே திடுக்கென விழித்தேன், அந்தோ, அந்தோ! பழய நைந்த தமிழரொடு நானிருந்தேனே! புதிய உலகம் 1. உலக ஒற்றுமை தன்பெண்டு தனபிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன் சின்னதொருகடுகுபோல் உள்ளங் கொண்டோன் தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்! கன்னலடா என் சிற்றூர் என்போனுள்ளம் கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம் தென்னை யுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச் சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்பு றுத்தல்! ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார், அவரவர்தம் வுடுநகர் நாடு காக்க வாயடியும் கையடியும் வளரச் செய்வார் மாம்பிஞ்சி யள்ளத்தின் பயனும் கண்டோம்! தூய உள்ளம் அன்பள்ளம் பெரிய உள்ளம் தொல்லுலக மக்களெலாம் 'ஒன்றே' என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே. பாரதி புது நெறி காட்டிய புலவன் தூய தமிழ் நாட்டுத் தோழியீர், தோழரே! வாயார்ந் துங்கட்கு வணக்கம் சொன்னேன்! வண்மைசேர் திருச்சி வானொலி நிலையம் இந்நாள் ஐந்தாம் எழிற்கவி யரங்கிற் கென்னைத் தலைமை ஏற்கும் வண்ணம் செய்தமைக் குநன்றி செலுத்து கின்றேன். உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி நன்னாள் விழாவினை நானிலம் பரப்பும் வானொலி நிலையம் வாழ்கென வாழித்தினேன்! இக்கவி யரங்கு மிக்கு யர்ந்ததாம் எக்க ரணத்தால்? என்பீராயின், ஊரொன றாகி உணர்வொன் றாகி நேர் ஒன்று பட்டு நெடுநாள் பழகிய இருக ரிற்கப் பிரமணிய னென்று சொற் பாரதியைச் சோம சுந்தர நற்பா ரதிபுகழ்ந்து சொற்பெருக் காற்றுவார் அன்றியும் பாரதி அன்பர் பல்லோர் இன்றவன் கவிதை ரெழிலினைக் கூறுவார். இங்குத் தலைமை ஏற்ற நானும் திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத் தல்போல் பாயதிப் புலவனைப் பற்றிச் சிற்சில கூறுவேன், முடிவுரை கூறுவேன் பின்பே கொலைமலிந்த நாளில் சொல்லா நோன்பு நிலைபெற வேண்டி நெடுந்தவம் புரிந்த நம் தாயகம் சமண்மதம் தனைப் பெற்ற தன்றோ? மத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில் இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய் இராம்னுசனை ஈன்ற தன்றோ? இந்நாடு வடகலை ஏனென எண்ணத் தென்கலை ஈன்று திகழ்ந்த தன்றோ? துருக்கர கிறித்தவர் சூழ் இந்த்க்களென் றிருப்பவர் தமிழரே என்ப துணராது சச்சரவு பட்ட தண்டமிழ் நாடு. மெச்சவும் க்ட்டுவோன் வேண்டுமென் றெண்ணி இராம லிங்கனை ஈன்ற தன்றோ? மக்கள் தொகுதி எக்குறை யாலே மிக்க துன்பம் மேவு கின்றதோ அக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்ந்தோனைச் சிக்தென ஈன்று சீர்பெறல் இயற்கையாம் ஜாரின் கொடுமை தாங்கா உருசியம் ஏருற லெனினை ஈன்றே தீரும்! செல்வர் சில்லோர் நல்வாழ்வுக்கே எல்லா மக்களும் என்ற பிரான்சில் குடிகள் குடிகட் கெனக்கவி குவிக்க விக்டர் யுகோ மேவினான் அன்றோ? தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால் இமைதிற வாமல் இருந்த நிலையில் தமிழகம், தமிழுக்குத் தகும் உயர் வளிக்கும் தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில் இலகு பாரதிப் புலவன் தோன்றினான். பைந்த மிழ்த்தேர்ப் பாகன், அவனொரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை! குவிக்கும் கவிதைக் குயில்! இந் நாட்டினைக் கவிழ்க்கும் பகையயைக் கவிழ்க்கும் கவியரசு நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா காடு கமழும் கற்பூரச் சொற்கோ கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் திறம்பாட வந்த மறவன், புதிய அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற் படரும் சாதிப் படைக்கு மருந்து! மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன் அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன் என்னென்று சொல்வேன் என்றென்று சொல்வேன் தமிழால், பாரதி தகுதி பெற்றதும் தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும் எவ்வா றென்பதை எரடுத்துரைக் கின்றேன். கடவுளைக் குறிப்பதே கவிதை என்றும் பிறபொருள் குறித்துப் பேசேல் என்றும் கடவுளைரக் குறிக்குமக் கவிதைரயும் பொருள்விளங் கிட எழு துவதும் ஏற்கா தெரன்றும் பொய்ம்மதம் பிறிதெனப் புளுகுவீர் என்றும் கொந்தும் தன்சாதிக் குண்டு சட்டிதான் இந்த உலகமென் றெழுதுக என்றும் பழமை அனத்தையும் பற்றுக என்றும் புதுமை அனத்தையும் பதைப்பீர் என்றும் கொள்ளுமிவ் வுலகம் கூத்தாடி மீசைபோல் எள்ளத் தனைநிலை இலாத தென்றும் எழிலுறு பெண்கள்பால் இனிபுறும் போதும் அழிவுபெண்ணாலென் றறைக என்றும் கலம்பகம் பார்த்தொரு கலம்ப கத்தையும் அந்தாதி பார்த்தொர் அந்தாதி தனையும் மாலைபார்த்தொரு மாலை தன்னையும் காவியம் பார்த்தொரு காவியந் தன்னையும் வரைந்து சாற்றுக்கவி திரிந்து பெற்று விரைந்து தன்பேரை மேலே எழுதி இருநூறு சுவடி அருமையாய் அச்சிட் டொருநூற்றாண்டில் ஒன்றிரண்டு பரப்பி வருகதே புலமை வழக்காறென்றும் இன்றைய தேவையை எழுதேல் என்றும் முன்னாள் நிலையிலே முட்டுக என்றும் வழக்கா றொழிந்ததை வைத்தெழு தித்தான் பிழைக்கும் நிலைமை பெறலாம் என்றும் புதுச்சொல் புதுநடை போற்றேல் என்றும் நந்மிழ்ப் புலவர் நவின்றனர் நாளும் அந்தப் படியே அவரும் ஒழுகினர். தமிழனை உன்மொழி சாறுறெனக் கேட்டால் தமிழ்மொழி என்று சாற்றவும் அறியா இருள்நிலை யடைந்திருந் திட்டதின் பத்தமிழ் செய்யுள் ஏட்டைத் திரும்பியும் பார்த்தல் செய்யா நிலையைச் சேர்ந்தது தீந்தமிழ். விழுந்தார் விழித்தே எழுந்தார் என அவன் மொழிந்த பாங்கு மொழியக் கேளீர் "வில்லினை யெடடா - கையில் வல்லினை எடடா - அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய் திடடா" என்று கூறு, இருக்கும் பகையரைப் பகைத் தெழும்படி பகர லானான். "பாருக்குள்ளே நல்ல நாடு - இந்த பாரதநாடு" என்பது போன்ற எழிலும் உணர்வீம் இந்நாட்டில் அன்பும் ஏற்றப் பாடினான். இந்நாடு மிகவும் தொன்மையானது என்பதைரப் பாரதி இயம்புதல் கேட்பீர். "தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளா மெங்கள் தாய்" மக்கள் கணக்கும் வழங்கும் மொழியம் மிக்குள பண்பையும் விளக்கு கின்ற கற்பனைத் திறத்தைக் காணுவீர் "முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் - அவள் செப்பும் மொழிபதி னெட்டுரையாள் - எனிற் சிந்தனை யொன்றுடையாள்." இந்நாட் டின்தெற் கெல்லை இயம்புவான்: "நீலத்திரை கடல் ஓரத்திலே - நின்று நித்தம் தவம்செய் குமரியெல்லை" கற்பனைக் கிலக்கியம் காட்டிவிட்டான்! சீதந்திர ஆர்வம்முதிர்ந்திடு மாறு மக்க ளுக்கவன் வழங்குதல் கேட்பீர் "இதந்தரு மனையி னீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும் பதம்திரு இரண்டு மாறிப் பழிமிகுந் திழிவுற்றாலும் விதம்தருகோடி இன்றல் விளைத்தெனை யழித்திட்டாலும் சுதந்திரதேவி நினைனைத்தொழுதிடல் மறக்கி லேனே." பாரதி பெரிய உள்ளம் பார்த்திடுவீர்கள்; "எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் எல்லோரும் சமமென்ப துறுதி யாச்சு" "விடுதலை விடுதலை விடுதலை" "மனிதர் யாரும் ஒருநிகர் சமானமாக வாழ்வமே" - என்றறைந்தார் அன்றோ? பன்னீராயிரம் பாடிய கம்பனும் இப்பொழுது மக்கள்பால் இன்தமிழ் உணர்வை எமுப்பிய துண்டோ? இல்லவே இல்லை. "செந்தமிழ் நாட்டைத் தேனாக்கிக் காட்டுவான். "செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிரலே" - என்றான். சினம் பொங்கும் ஆண்டவன் செவ்விழி தன்னை முனம் எங்கும் இல்லாத மொழியா லுரைத்தான். "வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா அங்கு நாடு 1. தமிழகம் மொழியும் நாடும்: ஆதிமனிதன் தமிழன்தான் அவன் மொழிந்ததும் செந்தமிழத்தேன் மூதறிஞர் ஒழுக்க நெறுகள் முதலற் கண்டதும் தமிழகந்தான் காதல் வாழ்வும் புகழ் வாழ்வும் காட்டியதும் தமிழ்நான் மறைதான் ஓதும் அநதத் தமிழ்நான் மறை உலகம் போற்றும் முத்தமிழ்தான்! நெய்தல்: நீளக்கடலும் முத்துப் பெட்டி; நெய்தல் நிலத்துப் பெண்மான் குட்டி ஆளனுக்கே வரிந்து கட்டி அளிக்கும் உதடு சர்க்கரைக்கட்டி குறிஞ்சி: வேளை பார்கும் சிச்சிலிக் குருவி மீனை வீசும் மலை அருவி காளையின்மேல் கண்வாள் உருவிக் கதை முடித்தாள் அவள் மருவி. முல்லை: காட்டு மயில் கூட்டம் கூடிக் களித்திருப்பார் சூரவை ஆடிக் கூட்டமுதப் பாட்டும் பாடிக் குழலூதிடும் ஆயர்பாடி. மருதம்: பரத்தையிடம் சென்று வந்து பஞ்சமான நிலை பகர்ந்து சிரித்த கணவன் மேல்சினந்து செங்கை தொட்டாள் பின்னுவந்து. பாடிவரும் ஆறுகள் பல; பரந்தயர்ந்த மலைகளும் பல; கூடி நடக்கும் உழவி மாடு கொடுக்கும் செல்வம் மிகப் பலபல; ஓடை என்பது மலர்ச்சோலை ஒழுகவட்டது தேனாலே! அறங்கிடந்து பண்பாடும் அன்பிருந்து சதில் ஆடும் திறங்கிடந்த நாகரிகம் செய்து தந்தது தமிழ்நாடு! மறக்கிடந்த தோள்வீரர் மகளிர்தரும் பெருக்கற்புச் சிறந்திருக்கும் தமிழ்நாடு! செந்தமிழர் தாய்நாடு! 2. எழில்மிகு தமிழ்நாடு எல்லாம் இருந்த தமிழ்நாடு படிப்பில்லாமல் பொல்லாங் கடைந்தது பிற்பாடு. சொல்லும் இயற்கை தரும் செல்வம் இல்லை என்னாமல் நெல்லும் சுவை முக்கனி நெய் பால் கரும்பு வெல்லம் -எல்லாம் இருந்த... தென்றல் சிலிர்க்க வரும் சோலை தனிற்குயிலும் தேன்சிர்டும் பாடும் அங்கு மாலை மணக்கும் மலர் ஒன்றல்ல ழூலைக்கு ழூலை தெருக்கள் தோறும் ஓரத்தில் நிழல் தரும் சாலை இடையிடையே தென்னை மாதுளைகள் வாய்ப்பு வாழை மரத்தில் தேனாகத் தொங்கும் பழச்சீப்பு விளா இலந்தை எந்நாழுமே கொடுக்கும் காய்ப்பு குலுங்கும் எலி மிச்சை நாவல் எங்கும் தோப்பு உலகினிலே எங்கும் கவிஞர் தீர்ப்பு! -எல்லாம் இருந்த... 3. விடுதலை ஆசை (தனித்தமிழ் வண்ணம்) தனதன தான தனதன தான தனதன தான தனதன தான கருவிழி ஓடி உலகொடு பாசி எனதிட மீளும் அழகோனே கழைநிகர் காதல் உழவினில் ஆன கதிர்மணி யே என் இளையோய் நீ! பெரியவ னாகி எளியவர் வாழ்வு பெருகிடு மாறு புரியாயோ பிறர்நலம் நாடி ஒழுகினை யாக இருசெவி வீழ மகிழேனோ! தெரிவன யாவும் உயர்தமிழாக கருகது கோரி உழையாயோ செறிதமிழ் நாடு திகழ்வது பாரீர் என எனை நீயும் அழையாயோ! ஒரு தமி ழேந முயிரென யாரும் உணர்வுறு மாறு புரியாயோ உயர்தமிழ் நாடு விடுதலை வாழ்வு பெற உன் தாசா பெருகாதோ! 4. நாட்டியல் நாட்டுவோம்! தென்பால் குமரி வடபால் இமயம் கிழக்கிலும் மேற்கிலும் கடலாய்க் கிடந்த பெருநிலத்தின் பெயரென்ன அத்தான்? நாவலந் தீவென நவிலுவார் கண்ணே! நீவின நடுவில் நாவல் மரங்கள் இருந்ததால் அப்பெயர் இட்டனர் முன்னோர், செவிவிதழ் மாணிக்கம் சிந்தும் செல்வியே எவ்வினத் தார்க்கும் இப்பெயர் இனிக்கும் நாவல் நறுங்கனி யாருக்குக் கசக்கும்? பழைய நம் தீவில் மொழி, இனம்பல உள. மொழியினின்று கல்வி முளைத்தது கல்வி இந்நாட்டில் கணக்காயர்களைக் கலைஞரை, கவிஞரைத், தலைகரைப், புலவரை விஞ்ஞானிகளை விளைத்தது - ஆயினும் கற்றவர், கல்லாரிடத்தும் கல்வியைப் பரப்ப முயலவில்லை பாழிலருள் விட்டு மீண்டவர் பிறரை மீட்கிலர். கற்றவர் சிலர், கல்லாதவர் பலர், என்னும் இழிவு நாட்டில் இருக்கலாம் எல்லாரும் இந்த நாட்டில் கற்றவர் எனும் நிலை இயற்றுதல் கற்றவர் பொறுப்பே! என்ன அத்தான், நீங்கள் இப்படிக் கற்றாரை எல்லாம் கடிந்து கொள்கின்றீர்? கற்றாலைத் திட்டவில்லை, கல்வி அற்றார்க்கு இரக்கம் காட்டினேன் அன்பே! கல்வி இருட்டிற்குக் கலங்கரை விளக்கு யாவர்க்கும் வாக்குரிமை இருக்குமிந் நாட்டில் யாவர்க்கும் கர்வி இருக்க வேண்டும். கண்ணிலார் எண்ணிலார் என்பது கண்டும் கண்ணுளார் கண்ணிலார் போல இருப்பதா? கல்லா வறியர்க்குக் கைப்பொருள் கல்வியே! இல்லை என்பது கல்வி இல்லாமையே! உடையவர் என்பவர் கல்வி உடையரே! நாட்டின் மக்கள் நாட்டின் உறுப்பினர் உறுப்பினர் நிறுவனம் உடையவர் ஆவார் சிலர் படித்தவர் பலர் படியாதவர் என்ற வேற்றுமை ஏன் வரவேண்டும்? ஆட்சி வேலை அதிக மிருக்கையில் நாட்டிற் கட்டாயக் கல்வி, நாளைக்கு ஆகட்டும் என்பவர் மக்கள் இன்று சாகட்டும் என்று சாற்றுகின் றவரே! எந்நாளுமே நான் எண்ணுவது இதுதான்: இந்த நாட்டில் யாவரும் படித்தவர் என்னும் நன்னிலை ஏற்படுவ தெந்நாள்? நாவலந் தீவில் மதங்கள் நனிபல! கடவுளே வந்து மதம்பல கழறினார் கடவுளின் தூதரும் ஒரு மதம் கழறினார் கடவுளை நைரிற் கண்டவர் சொன்னார் கேள்விப் பட்டவரும் கிளத்தினார். ஒருவர் 'கடவுள் ஒருவர்' என்பார். ஒருவர் 'கடவுள் ழூவர்' என்பார். ஒருவர் 'கடவுள் இல்லை' யென்றுரைப்பார். நாம் பெற்ற பேறு யார் பெற்றார்கள் ஒரு மதம் தோன்றி அதன்கிளை ஒன்பதாய்த் திருவருள் புரிந்த பெரியோரும் பலர்; மதங்களைப் பலவாய் வகுக்க, அவற்றில் விதம்பல சேர்த்த வித்தக ரும்பலர். நாவலந் தீவில் மதங்கள் அனைத்தும் இருக்கலாம் இன்னும் பெருக்கலாம் எனினும் மதங்கள் வேறு மக்கள் வேறு மதங்கள் மக்களின் மாற்றுச் சட்டைகள் இந்தில மக்கள் அவ்வெழிற் சட்டையின் உட்புறத் துள்ள மனிதரைக் காண்க. அந்த மனிதர் இந்தப் பெருநிலம் ஈன்ற பிள்ளைகள் என்னும் எண்ணம் அறிந்து பயனிலை உணர்ந்தால் ஒற்றுமை நிலைபெறும்; கலகம் அயவே நீங்கும். பன்மதம் சேர்ந்த பல்கோடி மக்களும் நாங்கள் ஒன்றுபட்டோம் என்று நவின்றால் மதங்களின் தலைவர் விரைந்து வந்து பிரிந் திருங்கள் என்றா பிதற்றுவர்? அவர்கள் அருலளல் உளம் கொண்டவர் அல்லரோ? நாட்டியல் என்னும் நல்ல தங்கத்தேர் நன்னிலை நண்ண வேண்டாமா? சொல், எல்லாரும் இந்நாட்டு மக்கள் என்றுணர்ந்தால் செல்வரும் நிலைக்குச் செல்லல் இலேசு. பல இனம் பலமொழி பற்றி ஒரு சில பழம்பெரு நிலத்தில் பலமாழி பல இனம் இருப்பதால், இஃதொருபல்கலைக் கழகம்! ஆனால், தேனாய்ப் பேசும் திருவே, ஓரினத்துக் குள்ள மொழியைப் பல இனத் துள்ளும் பரப்ப முயல்கதால் நாட்டில் ஒற்றுமை நண்ணும் என்ற கோட்பாடு சரி என்று கொள்வதற் கில்லை. அவ்வவ் வினத்தின் அவ்வம் மொழிகளைச் செம்மை செய்து செழுமை யாக்கி இனத்து மக்கள் எவர்க்கும் பரப்பும் ஒன்றினால் நாட்டில் ஒற்றுமை ஏற்படும் என்பதென் எண்ணம் கன்னற் சாறே! இனத்தைச் செய்தது மொழிதான், இனத்தின் மனத்தைச் செய்தது மொழிதான், மனத்தை மொழிப்பற்றினின்று பிரிப்பது முயற்கொம்பு. அன்னை மொழியையும் பட அதனோடு நான் சொன்ன மொழியையும் படி எனும் சொற்கள் கசக்குமே அலாது மக்கட்கு இனிக்குமோ? ஆங்கிலவன் தனக்குள அடிமையை நோக்கி ஆங்கிலம் படித்தால் அலுவல் கொடுப்பேன் என்றான். நாட்டில் இலக்குமண சாமிகள் தமிழ் மறந்து ஆங்கிலம் சார்ந்து தமிழைக் காட்டிக் கொடுக்கவும் தலைப்பட்டார்கள். இந்த திலத்தில் அடிமை இல்லை ஆதலால் துரைகளும் இல்லை அல்லவா? கைக்குறிகாரர் கணக்கிலர் வாழும் இந்த நிலையில் அயல்மொழி ஏற்றல் எவ்வாறு இயலும்? அமைதி என்னாகும்? நானிங்கு நவின்ற திருத்தம் வைத்துப் பாரடி நாவலந் தீவின் பரப்பை நீ பிரிந்த பகுதி பிணைந்தது பாரடி பிரிய நினைத்தவர் பிழை உணர்கின்றனர் பெருநிலத்தில் ஒரே கொடி பறந்தது! நாவலந் தீவினர் எல்லாரும் நல்லவர் எல்லாரும் வீரர் எல்லாரும் கவிஞர் இமயச் சாரலில் ஒருவன் இருமனான் குமரி வாழ்வான் மருந்து கொண் டோடினான் ஒருவர்க்கு வந்தது அனைவர்க்கும் என்ற மனப்பாங்கு வளர்ந்தது வேண்டிய மட்டும்! இமயம் மீட்கப் பட்டதிதோ பார் சீனன் செந்நீர் கண்ணீராக எங்கோ ஓட்டம் பிடிக்கின் றானடி! விளைச்சற் குவியல் விண்ணை முட்டியது சொழில் நலம் கண்டோம் - தேவை முழுமை எய்திற்று - வாழ்க அழகிய தாய்நிலம் அன்பில் துவைந்தே! 5. வள்ளுவர் வழி வாழ வழி வகுத்தார் வள்ளுவனார் தமிழ் மறை புகன்றார் நல்ல முறை நவின்றார் நம்மனோர் -வாழ வழி வகுத்தார் வள்ளுவனார். வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்றார். -வாழ வழி வகுத்தார் வள்ளுவனார். ஏழைக் கிரங்காததும் சரியா? நாட்டின் எளிமை கண்டு கூத்தாட ஒரு நரியா? இன்சொலால் ஈத்தளிக்க வலெற்குத் தன்சொலால் தான் கண்டனைத் திவ்வுல கென்றார் நம்மனோர் -வாழ வழி வகுத்தார் வள்ளுவனார். புத்தர் புகன்றார் பழைய நூற்கள் இப்படிப் பகர்ந்தன என்பதால் எதையும் நம்பிவிடாதே உண்மை என்று நீ ஒப்பிவிடாதே! பெருநாளாகப் பின்பற்றப்படுவது வழக்கமாக இருந்து நீ நம்பிவிடாதே உண்மை என்று நீ ஒப்பிவிடாதே! பெரும்பான் மையினர் பின்பற்று கின்றனர் இருப்பவர் பலரும் ஏற்றுக் கொண்டனர் என்பதால் எதையும் நீ நம்பிவிடாதே! பன்பற்றுவதால் நன்மையில்லை! ஆண்டில் முதிர்ந்தவர் அழகியவர் கற்றவர் இனிய பேச்சாளர் என்பதற்காக எதையும் நம்பிடேல் எதையும் ஒப்பேல்! ஒருவர் சொன்னதை உடன் ஆராய்ந்துபார் அதனை அறிவினாற் சீர்தூக்கிப்பார் அறிவினை உணர்வினால் ஆய்க! சரி எனில் அதனால் உனக்கும் அனைவருக்கும் நன்மொ உண்டெனில் நம்பவேண்டும் அதையே அயராது பின்பற்றி ஒழுகு! இவ்வுண்மைகளை ஏற்று நீ நடந்தால் மூடப்பழக்க வழக்கம் ஒழியும் சமயப் பொய்கள் அறிவினாற் சாகும்! இவைகள் புத்தர் பெருமான் உவந்து மாணவர்க்கு உரைத்தவை என்பவே! உழைப்பவரும் ஊராள்பவரும் மாடாய் உழைப்பார்க்கு வீடிர்ரே சோறில்லை நாடோறும் அங்கம் வளையல் - ஆண்டை மனைவி போடமட்டும் தங்கவளையல். பாடே படுவார்க்குக் காடோ - கரிக்கலோ கண் மூடாமல் களம் காப்பே - ஆண்டை மனைவி போடமட்டும் பவுன் காப்பே. சாகுபடி தீர்ந்ததென்று போகும்படி தொண்டைக்கம்மல் - ஆண்டை மனைவிக் காகமடிடும் கெம்புக்கம்பல். பாதியத்தம் கண்டுமட்டும் பாடுபட்டுச் சுண்டுமட்டும் மீதிவைக்க ஏதுவாக - நல்லாண்டையரின் மோதிரமெல்லாம் நகாசு. தூசின்றி நெல் மணியைத் தூற்றித்தரும் தோழர்கட்குக் காசில்லை கட்டத் துணியில்லை - ஆண்டையர்க்கு வேசு கிட்டப்பா புகையிலை. கையலுத்துக் காலலுத்துக் காலமெல்லாம் உழைப்பவர் கண்டதில்லை ஒரு தானம் - ஆண்டைகள் வீட்டில் ஐவருக்கோ கோதானம். தமிழன் பிறக்கும் போதே பெருமையோடு பிறந்தவன் தமிழன் - தமிழ்ப் பெருங்குடி தன்னிற் பிறந்தவன் ஆதலால் - பிறக்கும் போதே... இறப்பதே இல்லை தமிழன் - புகழுடம்பை எங்குமே வைத்தது காண்க மறக்குமா வையம் தமிழன் - மனப்பாங்கு வளர்த்த அறத்தையும் அறிவையும்? சிறப்பதென்றால் தமிழாற் சிறக்க வேண்டும் தீர்கதென்றால் தமிழ் மறந்து தீர்தல் வேண்டும் - பிறக்கும் போதே... முதலில் தோன்றிய மனிதன் தமிழன் முதல்மொழி தமிழ் மொழி - ஆதலால் புதுவாழ் வின்வேர் தமிழர் பண்பாடே - பிறக்கும் போதே... முதுகிற்புண் படாதவன் தமிழன் - போர் எனில் மொய்குழல் முத்தமென் றெண்ணுவான் மதிப்போடு வாழ்பவன் தமிழன் வாழ்வதற்கென்று வாழ்பவன் அல்லன் - பிறக்கும் போதே...